மாஸ்கோ: ரஷ்யாவில் கஷன் நகரித்தில் உள்ள பிரபல பள்ளி கூடத்தில் நடைபெற்ற  துப்பாக்கி சூட்டில் 7 மாணாவர்கள், ஒரு ஆசிரியர் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இநத் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 500 மைல் தொலைவில்  அமைந்துள்ளது கஷன் நகரம். இங்குள்ள பள்ளியொன்றில் காலை  9.20 மணி அளவில் அடையாபளம் தெரியாத மர்ம நபர் புகுந்து சரமாரியாக  துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான்.

இந்த திடீர் தாக்குதலில், ஒரு  ஆசிரியர் மற்றும்  7 மாணவர்கள் என மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளனர். மேலும் 32 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் 3வது தளத்தில் இருந்த மாணவர்கள் ஜன்னலை உடைத்து கொண்டு தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது கீழே விழுந்து 2 மாணவர்கள் உயிரிழந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்   உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்துள்ளதும், அவரது வயது 19 என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. துப்பாக்கி சூடு நடத்த காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பள்ளியில் 714 மாணவர்களும், 70 ஊழியர்களும் இருந்தாக கூசுறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த ரஷ்யஅதிபர் புதின், இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்தாகவும், மரணம் அடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவத்துக்கொண்டதுடன்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படும் வகையில், மருந்து பொருட்கள், மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள்  உடன் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

மேலும்,  குடிமக்கள் எந்த வகையான ஆயுதங்களை வைத்திருக்கலாம் என்பதற்கு புதிய விதிமுறைகளை வகுக்கும்படியும் அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டு உள்ளார்.