கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதோடு அதுகுறித்து எதுவும் பேசாமல் மவுனம் காத்து வரும் பிரதமர் மோடியை இந்திய மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டு பத்திரிகைகளும் வெகுவாக குற்றம்சாட்டி வருகின்றன.

‘தி கார்டியன்’ என்ற பத்திரிக்கையில் மோடியின் நிர்வாக திறமையின்மையால் தான் கொரோனா தொற்று இந்தியாவில் கைமீறி சென்றதாக கூறியிருக்கிறது.

இந்நிலையில், ‘தி டெய்லி கார்டியன்’ என்ற பத்திரிகையில் மோடியின் செயல்பாடுகளை உலகநாடுகள் பாராட்டுவதாக செய்தி வெளியாகி இருக்கிறது என்று கூறி, சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க. ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தி டெய்லி கார்டியன் பத்திரிக்கை குறித்து இணையதளம் வழியாக மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து அந்த பெயரில் இணையதள முகவரியை பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், இதுபோல் வேறு சில வெளிநாட்டு பத்திரிக்கையின் பெயரிலும் இணையதள முகவரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, சில இணையதளங்களை வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் பெயரில் பதிவு செய்துள்ள விவரமும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு மனதளவில் சோர்வடைந்துள்ள நேரத்தில், பிரதமர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், இருக்கும் இடம் தெரியாமல் உள்ளதை வெளிநாட்டு பத்திரிகைகள் குறை கூறி வரும் வேளையில், அதே பெயரில் போலி இணையதளங்கள் தொடங்கி அவரது ஆதரவாளர்கள் செய்யும் பித்தலாட்டம் அனைவருக்கும் எரிச்சலூட்டுவதாக உள்ளது.

இந்நிலையில், மோடி மீது எதிர்க்கட்சியினர் பொய் குற்றச்சாட்டு கூறி வருவதாக பா.ஜ.க. தலைவர் ஜெ.பி. நட்டா கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது.