சென்னை:
மிழக சட்டசபை கூட்டம், கவர்னர் ரவி உரையுடன் இன்று துவங்குகிறது.

ஆண்டுதோறும், தமிழக சட்டசபையின் முதல் கூட்டம், கவர்னர் உரையுடன் துவங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டம், கவர்னர் ரவி உரையுடன், இன்று துவங்குகிறது.

இதில், அரசின் சாதனைகள், தற்போதைய செயல்பாடுகள், வரும் கால திட்டங்கள், இலக்குகள் குறித்து பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற உள்ளது.

பால் விலை, மின் கட்டணம் உள்ளிட்ட விலை உயர்வை கண்டித்து, கவர்னர் உரையை அ.தி.மு.க.,வினர் புறக்கணிக்க அதிக வாய்ப்புள்ளது. தமிழ் கற்று வரும் கவர்னர் ரவி, உரையின் துவக்கத்தில் தமிழில் பேசுவார் என, எதிர்பார்க்கப் படுகிறது.

பின், ஆங்கிலத்தில் கவர்னர் வாசிக்கும் உரையை, இறுதியில் சபாநாயகர் அப்பாவு தமிழில் மொழிபெயர்த்து வாசிக்க உள்ளார். சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலரும், நேற்று மாலை முதல் சென்னை வரத்துவங்கி உள்ளனர்.