ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் பதவிக் காலம் நீட்டிப்பு

Must read

கொழும்பு:
சிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் பதவிக் காலத்தை வரும் 2024ஆம் ஆண்டு வரை நீடிப்பதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவராக ஷா ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் நஜ்முல் ஹசன் பாப்பனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார். ஆசிய கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ஏசிசி பொறுப்பேற்றுள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) துணைத் தலைவராக பங்கஜ் கிம்ஜியும், வளர்ச்சிக் குழுவின் தலைவராக மகிந்த வல்லிபுரம் நியமிக்கப்பட்டனர்.

More articles

Latest article