2020 ம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருதுக்கு ஹிந்தி நடிகை ஆஷா பரேக் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதனை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று அறிவித்தார்.

79 வயதான ஆஷா பரேக் 1952 ம் ஆண்டு முதல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

95 படங்களில் நடித்துள்ள இவர் 1960 -70 பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த இவருக்கு 1992 ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

செப்டம்பர் 30 ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவின் போது இவருக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]