டில்லி

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான புகார் விசாரணையில் அதிருப்தி அடைந்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் பதவி விலக உள்ளதாக ஆங்கில ஊடகமான தி ஒயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் உச்சநீதிமன்ற பெண் உதவியாளர் பாலியல் புகார் அளித்தார். அத்துடன் அவருக்கு ஒத்துப் போகாததால் தம்மையும் தமது குடும்பத்தினரையும் காவல்துறை பலவிதங்களில் சித்திரவதை செய்ததாக புகாரில் தெரிவித்தார். இதை ஒட்டி நீதிபதிகள் குழு ரகசிய விசாரணை நடத்தியது.

அந்த விசாரணையில் புகார் அளித்த பெண்ணின் வழக்கறிஞருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. விசாரணையில் ரஞ்சன் கோகாய் குற்றமற்றவர் என தீர்ப்பளித்து புகார் மனு ரத்து செய்யப்பட்டது. இந்த விசாரணைக்கு அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் எதிர்ப்பு தெரிவித்து அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் அவர் வழக்கறிஞர் உள்ளிட்ட வெளி உறுப்பினர்களையும் விசாரணையில் அனுமதித்திருக்க வேண்டும் என கூறி உள்ளதாக சொல்லபடுகிறது.

இதற்கு முன்பு நடந்த ஒரு வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா பெண்கள் அளிக்கும் புகார் மீதான வழக்கு விசாரணையின் போது வெளி உறுப்பினர்கள் குறிப்பாக ஓய்வு பெற்ற பெண் நீதிபதிகளில் ஒருவர் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தை உச்சநீதிமன்ற நீதிபதியான சந்திரசூட் வேறொரு வழக்கில்தெரிவித்துள்ளார். இவை அனைத்தையும் வேணுகோபால் தனது கடிதத்தில் சூட்டி காட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அரசு மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதால் வேணுகோபால் தனது கடித்தத்தில் குறிப்பிட்டவைகளை தனது சொந்தக் கருத்து எனவும் அரசின் கருத்து அல்ல எனவும் அறிவிக்க வற்புறுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த வற்புறுத்தலை ஒட்டி வேணுகோபால் கடிதத்தில் உள்ளவை தமது சொந்தக் கருத்து என மற்றொரு கடிதம் அனுபியதாக செய்தியில் குறிபிடப்பட்டுள்ளது. அத்துடன் அது அரசின் கருத்து அல்ல என்பதையும் அதில் தெரிவித்துள்ளாராம்.

இந்த நிகழ்வுகளால் தற்போது வேணுகோபால் மிகவும் அதிருப்தியில் உள்ளதாகவும் தமது சட்ட தொழிலை மிகவும் மதித்து வரும் அவருக்கு இது மிகவும் ஏமாற்றம் அளித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே இதை ஒட்டி அவர் ராஜினாமா செய்யும் மனநிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் ஒரு வேளை ராஜினாமா செய்தால் இந்த வழக்கில் அரசின் நிலைபாடு அவருக்கு சரியாக படவில்லை என பொருள் கொள்ளலாம்.

Thanx ; THE WIRE