தாஜ்மகாலில் புகுந்த மலைப்பாம்பு, : பயணிகள் இடையே பதட்டம்

Must read

க்ரா

சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு  தாஜ்மகாலின் உள்ளே புகுந்ததால் பயணிகள் பயந்து ஓடி உள்ளனர்.

முகலாய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவக ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை கட்டினார்.   யமுனை ஆற்றின் கரையில் உள்ள இந்த கட்டிடம் உலக அதிசயங்களில் ஒன்றாகும்.   இந்த தாஜ்மகாலை கண்டு களிக்க உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கானோர் இந்தியாவுக்கு வருகின்றனர்.

சுமார் 9 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பு தாஜ்மகால் வாகன நிறுத்துமிடம் அருகே வந்துள்ளது.   அந்த மலைப்பாம்பை யாரும் பார்க்கவில்லை. எனவே அது மேலும் உள்ளே நுழைந்த போது அங்குக் கட்டுமானப் பணி புரிந்த தொழிலாளர்கள் பார்த்து காவல்துறையினரிடம்  புகார் அளித்துள்ளனர்.

தாஜ்மகாலுக்குள் மலைப்பாம்பு புகுந்த செய்தி சுற்றுலாப்பயணிகள் இடையே பரவியதால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது   இதனால் பயந்து போன அவர்கள் கட்டிடத்தை விட்டு ஒடி வந்துள்ளதால் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது.  காவல்துறையினர் இடை புகுந்து அவர்களைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதற்கிடையே காவல்துறையினர் வனத்துறையிடம் தகவல் அளிக்கவே அவர்கள் அந்த மலைப்பாம்பைப் பிடித்து ஆய்வு செய்ய வனத்துறை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.  அதன் பிறகு அந்த பாம்பு வனப்பகுதிகளுக்குள் விடப்பட்டுள்ளது.   தாஜ்மகால் அருகே ஏராளமான புல்வெளி உள்ளதால் அங்கு மலைப்பாம்பு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

More articles

Latest article