விக்ரம் தமன்னா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற ஸ்கெட்ச் படத்தை தயாரித்தது மூவிங் பிரேம்ஸ் படநிறுவனம். இது தற்போது அரவிந்த்சாமி – ரெஜினா ஜோடியாக நடித்துள்ள ” கள்ளபார்ட் ” படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து உள்ளது.
என்னமோ நடக்குது, அச்சமின்றி உள்ளிட்ட படங்களை இயக்கிய, பி. ராஜபாண்டி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் பெறாடி ஆகியோர் முக்கிய பத்திரத்தில் தோன்றுகின்றனர்.
படம் பற்றி இயக்குனர் பி.ராஜபாண்டி கூறும்போது, “இதுவரை யாரும் தொடாத ஒரு கதை. படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கள்ளபார்ட் என்பது பொருந்தும். ஹைஸ்ட் திரில்லரில் நடக்கும் உணர்வு பூர்வமான ஒரு போராட்டம் தான் படம்.
பெரும் பொருட் செலவில், நான்கு செட்டுகள் அமைக்கப்பட்டு மிகப்பிரம்மாண்டமாக படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். படம் நிச்சயம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.
படம் மே மாதம் வெளியாக உள்ளது
ஒளிப்பதிவு – அரவிந்த் கிருஷ்ணா
இசை – நிவாஸ் K பிரசன்னா
பாடல்கள் – கங்கை அமரன், சரஸ்வதி மேனன்.
எடிட்டிங் – S. இளையராஜா
கலை – மாயா பாண்டி
ஸ்டண்ட் – மிராக்கில் மைக்கேல்
மக்கள் தொடர்பு – மணவை புவன்.