பெங்களூரு

ருமான வரித்துறையிடம் ரூ. 40 லட்சம் வருமானம் காட்டிய கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.

கர்நாடகா மாநிலம் சாமராஜ நகராவில் புஷ்பபுரா பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி ராசப்பா ரங்கா (வயது 34).   இவர் தற்போது கோரமங்களாவில் கனகபுரா சாலையில் வசித்து வருகிறார்.    கடந்த வருடம் தான் ரூ. 40 லட்சம் வருமானம் ஈட்டியதாக வருமான வரித்துறையிடம் தெரிவித்துள்ளார்.   ஆனால் அந்த வருமானம் எவ்வாறு வந்தது என்பது குறித்து அவரால் சொல்ல இயலவில்லை.

இதைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர்.   அவருக்கே தெரியாமல் நடந்த விசாரணையில்  அவர் கடந்த 2013 முதல் கஞ்சா விற்பனையில் ஈடுபடு வந்தது தெரிய வந்துள்ளது.   தனக்கு ஏஜண்டுகளாக பல இளைஞர்களை பணியில் அமர்த்தி கஞ்சா விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.

ராசப்பா ரங்கா கனகபூரா சாலையில் உள்ள ஒரு பங்களாவில் ரூ.40000 வாடகையில் வசித்து வருகிறார்.  மேலும் கிராமத்தில் ஏராளமான சொத்துக்களும், சொகுசுக் காரும் வைத்துள்ளனர்.    அவர் வீட்டில் திடீரென சோதனை இட்டதில் 26 கிலோ கஞ்சா மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கப் பணம் பிடிபட்டுள்ளது.   அவரைக் கைது செய்து விசாரித்துள்ளனர்.

ராசப்பா ரங்கா அளித்த தகவலின்  பேரில் அவரது முக்கிய உதவியாளரான ஸ்ரீனிவாஸ் மற்றும் கஞ்சா சப்ளையர் சேஷு ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   மேலும் அவ்ர்களிடம் இருந்து 25 கிலோ கஞ்சா, மொபைல்,  கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய கார், மற்றும் ரூ, 6 லட்சம் ரொக்கம் ஆகியவைகளையும் கைப்பற்றி உள்ளனர்.

இவர்கள் மீது வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.    அத்துடன் இவர்களுடைய மற்ற கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.