பிரபல பாலிவுட் இயக்குனர  சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவத் திரைப்படம் நாடு முழுவதும் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் 125 கோடி ரூபாய் வசூலாகி சாதனை படைததுள்ளதாக கூறப்படுகிறது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள இந்தி திரைப்படமான பத்மாவத் படத்துக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த படத்தில், பத்மாவதியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். ஷாகித் கபூர் ராணா ரத்தன் சிங் வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதின் கில்ஜி வேடத்திலும் நடித்துள்ளனர்.

சித்தூர் ராணி பத்மினியின் கதையை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் ராஜபுத்திர அரசியை அவமதிப்பதாக உள்ளதாக பல மாநிலங்களில் எதிர்ப்பு வந்துள்ளது. இதையடுத்து, தணிக்கை வாரியம் படத்தை மறு ஆய்வு செய்து, சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கியும்,  படத்தின் பெயரை பத்மாவதிக்கு பதிலாக பத்மாவத் என்று வைக்கும்படி அறிவுறுத்தி படத்தை வெளியிட சான்றிதழ் கொடுத்தது.

ஆனாலும் படத்தை வெளியிட  மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், அரியான உள்பட 4 மாநிலங்கள்  தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து பத்மாவத் திரைப்பட தயாரிப்பாளர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், 4 மாநிலங்கள் விதித்த தடை நீக்கி அதிரடி உத்தரவிட்டனர். மேலும் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் மற்ற மாநிலங்களும் படத்தை வெளியிட தடை அறிவிப்பு  வெளியிடக்கூடாது என மாநிலங்களுக்கு தடையும் விதித்தது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய பத்மாவத் படம் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியாகி வசூலை குவித்து வருகிறது.

வடமாநிலங்களில் ஒரு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து தியேட்டர்கள் படத்தை வெளியிடாத நிலையில், மற்ற பகுதிகளில் படம் வெளியாகி அமோக ஆதரவை பெற்று வருகிறது.

கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படத்தின் வாயிலாக இதுவரை ரூ.128 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக தகவ்லகள் வெளியாகி உள்ளது. படத்திற்கு மக்களிடத்திலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் இன்னும் இரண்டு நாட்களில் வசூல் 150 கோடி ரூபாயை எட்டும் என்றும், இந்தியாவில் மட்டும் 250 கோடி ரூபாய் வசூலாகும் என எதிர்பார்ப்பதாக பத்மாவத் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.