டெல்லி: சீன மொழி தெரிந்தவர்கள் தேவை என இந்திய ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீன துருப்புக்களுடன் ஈடுபடுவதற்கு மாண்டரின் மொழி (சீன மொழி)  வல்லுனர்களை ராணுவத்தில் சேர்க்க, இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கிழக்கு லடாக்கில் நடந்து வரும் எல்லைப் பதற்றத்திற்கு மத்தியில், சீன ராணுவ வீரர்களுடன் சூழ்நிலை ஏற்படும்போது, ​​சீன ராணுவ வீரர்களுடன் ஈடுபடுவதற்கு இளைய மற்றும் மூத்த ராணுவத் தளபதிகளுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன், பிராந்திய ராணுவத்தில் மாண்டரின் மொழி நிபுணர்களை சேர்க்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.

டெரிடோரியல் ஆர்மியில் காலியாக உள்ள மாண்டரின் மொழி நிபுணர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ராணுவம் வெளியிட்டுள்ளது.

அறிவிப்பின்படி, ஐந்து சிவில் வேட்பாளர்களும் ஒரு முன்னாள் சேவை அதிகாரியும் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். இவர்கள் சூழ்நிலை ஏற்படும் போது, ​​PLA பணியாளர்களுடன் ஈடுபடுவதற்கு இளைய மற்றும் மூத்த இராணுவத் தளபதிகளுக்கு அதிகாரம் அளிப்பதே இதன் நோக்கமாகும் என இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இராணுவத்தின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய கட்டளைகளில் உள்ள மொழிப்பள்ளிகளில் பல்வேறு மாண்டரின் மொழி படிப்புகள் நடத்தப்படுகின்றன என்று வட்டாரங்கள் தெரிவித்தன. தவிர, மாண்டரின் மொழியிலிருந்து பல்வேறு ஸ்கிரிப்டுகள் அல்லது இலக்கியங்களை மொழிபெயர்க்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளையும் இராணுவம் பயன்படுத்துகிறது.