இந்தூர் :

ந்தூர் மார்க்கெட்டில், தக்காளி  உட்பட காய்கறிகளின் பாதுகாப்பிற்காக, ஆயுதம் தாங்கிய வீரர்கள்  காவல் காத்து வருகிறார்கள்.

தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை சமீபகாலமாக  பெருமளவு அளவு உயர்ந்துவிட்டது.

குறிப்பாக  தக்காளியின் கடுமையாக உயர்ந்துள்ளது.  தக்காளி தற்போது கிலோ ரூ. 100க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த த 20ம் தேதி, இந்தூர் மார்க்கெட்டில் ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான 300 கிலோ தக்காளியை  மர்மநபர்கள்  கொள்ளையடித்துச் சென்றனர்.

இதை அடுத்து, தக்காளி ஏற்றிவரும் ஒவ்வொரு நான்கு சக்கர வாகனத்துக்கும் தலா , ஐந்துக்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு அளிக்கத்துவங்கியிருக்கிறார்கள்.

இதேபோல், கடந்த 15ம் தேதி, மும்பை மார்க்கெட்டில் 2,600 கிலோ தக்காளி இருந்த டிரக்கை மர்மநபர்கள் கடத்திச்சென்றதும்  குறிப்பிடத்தக்கது.