சென்னை:

னாதனம், சமத்துவம் காக்க பாஜகவில் உள்ள இந்துக்கள் எங்கள் கட்சிக்கு வந்துருங்க என்று அழைப்பு விடுத்துள்ளார் இந்து மக்கள் கட்சித் தலைவர்  அர்ஜுன் சம்பத். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்து மத சனாதனம் அனைத்து இந்துக்களையும் சமமாக_நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. அதுபோன்ற நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே இந்துமுன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை சந்திக்க சென்றபோது,  அவரை  தரையில் அமர வைத்து பேசியதும், அதே வேளையில், எச்.ராஜாவை தனக்கு சமமான இருக்கையில் அமர வைத்து பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது.

இந்த நிலையில், அதை நிருபிக்கும் வகையில் இந்து முன்னணி தலைவர் அர்ஜுன் சம்பத் தற்போது அழைப்பு விடுத்துள்ளார். இந்துத்துவா கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் உள்ள  சாதி இந்துக்கள்,  அங்கிருந்து வெளியேறி, இந்துமக்கள் கட்சிக்கு வாருங்கள், சதானதம் காக்க  சமத்துவம் வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்….

அர்ஜுன்சம்பத்தின் இந்த அதிரடி அறிவிப்பு பாஜகவில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.