குல்பூஷண் ஜாதவ் வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முன்வைத்த வாதங்கள்

Must read

தி ஹேக்: இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் அளித்த மரண தண்டனை உத்தரவு குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா இன்று தனது வாதங்களை முன்வைத்துள்ளது.

இந்தியக் கடற்படை  முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக அந் நாட்டின் பலூசிஸ்தான் பகுதியில் கடந்த மார்ச் 3ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.  விசாரணைக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம்.

இதை  எதிர்த்து நெதர்லாந்து நாட்டின் தலைநகரான தி ஹேக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் கடந்த 8ம் தேதி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோன்னி ஆபிரஹாம், ஜாதவின் மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும்  இந்த வழக்கு தொடர்பான தொடர் விசாரணை மே 15ஆம் தேதி நடக்கும் என்றும் அறிவித்தார்.

இதன்படி, கோர்டில்  இந்தியா தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது.  இந்தியா சார்பில் ஐநா பிரதிநிதிகளாக ஹரிஷ் சார்வே மற்றும் தீபக் மிட்டல் ஆகியோர் இந்த வாதங்களை முன்வைத்தனர்.

அவர்கள் முன்வைத்த வாதம்:

1. பாகிஸ்தான் நீதிமன்றம் குல்பூஷணுக்கு அளித்த தீர்ப்பு மிகத்தவறானது. அதனை நீக்கும்படியாக  சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு  அளிக்க வேண்டும்.

2. ஜாதவ் விவகாரத்தில்  பாகிஸ்தானிடம் இந்தியா வைத்த வேண்டுகோள்கள் எதையும் பாகிஸ்தான் பொருட்படுத்தவே இல்லை.
3. பாகிஸ்தான் அதிகாரிகளை தொடர்புகொள்ள பலமுறை  தடவைகள் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், இந்தியாவுடன் தொடர்புகொள்வதை பாகிஸ்தான் தொடர்ந்து புறக்கணித்தது.

4. குல்பூஷன் ஜாதவிற்கு அளிக்கப்பட்ட தண்டனை உத்தரவு தொடர்பான ஆவணங்கள் எதுவும் பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படவில்லை.

5. அடிப்படையான மனித உரிமைகளைக்கூட பாகிஸ்தான் கடைபிடிக்கவில்லை.  அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வியன்னா மனித உரிமைகள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறுவதாகும்.

6. சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியத் தரப்பு வாதங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு இறுதித்தீர்ப்பு வரும் வரை குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது.

7. பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது குல்பூஷணிடமிருந்து வற்புறுத்தி  வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

8. குல்பூஷணுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் உரிய சட்டப்பூர்வமான உரிமைகள் அளிக்கப்பட வேண்டும்.

9. குல்பூஷண் ஜாதவின் பெற்றோருடைய விசா விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. வேண்டுமென்றே இவற்றை பாகிஸ்தான் அரசு பரிசீலிக்காமல் இருக்கிறது.

10. குல்பூஷண் ஈராக்கிலிருந்து கடத்திவந்து பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டார் என்பதே உண்மை.

இந்தியா சார்பில் ஐநா பிரதிநிதிகளாக ஹரிஷ் சார்வே மற்றும் தீபக் மிட்டல் ஆகியோர் இந்த வாதங்களை முன்வைத்தனர்.

 

More articles

Latest article