டில்லி:

மாசு கட்டுப்பாட்டில் இருந்து தாஜ்மகாலை பாதுகாக்கும் வகையில் பார்வையாளர்களை அனுமதி நேரத்தில் மாற்றம் கொண்டு வர தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

உ.பி. மாநிலம் யமுனை நதிக்கரையில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட தினமும் சுமார் 50,000 சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி இலவசமாகும். தற்போது வரை நுழைவு கட்டணம் வசூலித்து வந்தபோதிலும் நேரக்கட்டுப்பாடு என்பது இல்லை.

இந்நிலையில் தாஜ்மஹால் தனது பொலிவை இழந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய தொல்லியல் துறை மாநில அரசுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் தாஜ்மஹாலை பார்வையிட 3 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

மனித மாசுபாட்டில் இருந்து தாஜ்மஹாலை பாதுகாக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்ப்படும் என்று பரிந்துரை செய்துள்ளது