சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மானுக்கு ரீமிக்ஸ் பாடல்கள் என்றாலே எரிச்சலாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார் .

இந்நிலையில், அவரது மசக்களி பாடலை மோசமாக ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

ஷார்ட் கட்ஸ் இல்லை, முறையாக நியமனம் செய்து, பல இரவுகள் தூங்காமல் கண்விழித்து, எழுதி, எழுதி, 200 இசைக் கலைஞர்களைக் கொண்டு, 365 நாட்களும் மண்டையை உடைத்து கிரியேட்டிவாக யோசித்து பல தலைமுறைகளுக்கான இசையை உருவாக்க பாடுபடுகிறோம் , அசல் பாட்டை கேட்டு மகிழுங்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

இந்த ட்வீட்டை பார்த்த அனிருத் ரிட்வீட் செய்து மொசார்ட் ஆன் ஃபயர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இசையமைப்பாளர் தமன்னும் இதை பகிர்ந்துள்ளார்.தமன் இந்த ட்வீட்டை பகிர்ந்து ஆமாம் நிச்சயமாக ஃபயர்தான். உண்மையான மாஸ்டர் பீஸ் என குறிப்பிட்டுள்ளார்.