சென்னை

வுரி லங்கேஷ் கொலை பற்றி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து கலைஞர்கள் அரசியல் பற்றி பேசக்கூடாது என ஏ ஆர் ரகுமான் கூறி உள்ளார்.

ஆஸ்கார் விருது வாங்கிய புகழ் பெற்ற இந்திய இசை அமைப்பாளர் தமிழ்நாட்டை சேர்ந்த ஏ ஆர் ரகுமான் ஆவார்.  இவர் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காதவர்.  அவர் சமீபத்தில் கூறிய கருத்து ஒன்றுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை ஒட்டி விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று ஏ ஆர் ரகுமான் ஒரு அறிக்கையில், கவுரி லங்கேஷ் கொலை பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.  அதில், “இப்படி ஒரு சம்பவம் இந்தியாவில் தொடரும் என்றால் அது என் இந்தியா அல்ல.” என சொல்லி இருந்தார்.   அவரின் கருத்துக்கு மீடியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.   அதையொட்டி நேற்று மற்றொரு அறிக்கையை ஏ ஆர் ரகுமான் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் காணப்படுவதாவது :

“எனக்கு கவுரி லங்கேஷ் யார் என்பதோ அவர் என்ன கருத்துக்களை வெளியிடுவார் என்பதோ தெரியவே தெரியாது.   நான் இசை அமைத்துக் கொண்டிருந்த போது இந்த கொலை செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.    மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் இது போன்ற கொடூர கொலைகள் நடப்பதை என் மனம் தாங்கவில்லை.   அதனால் அந்த அறிக்கையை அளித்தேன்.  அதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

எனது இந்திய நாடு, உலகுக்கே ஒரு அமைதிக்கான எடுத்துக்காட்டாக திகழ்கிறது.  இதற்காக நாம் நம்மையே பாராட்டிக் கொள்ள வேண்டும்.  அதைக் கெடுப்பது போல் சிலர் இது போன்ற நிகழ்வை நடத்துகின்றனர்.   அவர்களை வெறுத்து ஒதுக்க வேண்டும்.  நான் அறிந்த வரை இந்த அரசு பல நல்ல செயல்களை நிகழ்த்தி வருகிறது.  அது மட்டும் இன்றி இது போன்ற கொடூர செயல்கள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கலைஞர்கள் அரசியலில் பற்றி எதுவும் பேசாமல் அமைதி காக்க வேண்டும்.   நம்மைப் போன்ற வசதியான மக்கள் எந்த ஒரு பாதிப்புக்கும் உண்டாவதில்லை.  அதே போல் அதிகார வர்க்கத்தினரும் எந்த பாதிப்பும் அடைவதிலை.   ஆனால் ஏழை மக்கள் மட்டுமே துயர் அடைகின்றனர்.  அவர்களுக்கும் உரிமை உள்ளது.  அவர்களை நாம் தான் காக்க வேண்டும்.   கலைஞர்கள் தங்களின் கலையின் மூலம் அமைதியை உண்டாக்க பாடுபடவேண்டும்.” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.