நடிகர் அஜீத் குமாருக்கு ஆபரேஷன் : ரசிகர்கள் கலக்கம் !

Must read

சென்னை

பிரபல நடிகர் அஜீத் குமாருக்கு தோள்பட்டை வலி காரணமாக சென்னை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

சமீபத்தில் சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த விவேகம் படம் வெளியானது.   இதில் இண்டர்போல் அதிகாரியாக நடித்த அஜித்துடன், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.   வெளிநாட்டில் இந்த படத்தின் பெரும் பகுதி படமாக்கப்பட்டது.   பல்கேரியா நாட்டில் ஒரு பிரம்மானடமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட போது அஜித்குமாரின் தோள்பட்டையில் பலத்த அடி பட்டது.

அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற அஜீத்திடம் அஜீத்திடம் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள வற்புறுத்தப் பட்டது.   படப்பிடிப்பு தடை பெறும் என்ற காரணத்தினால் அவர் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளாமலே தொடர்ந்து நடித்து வந்தார்.   படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை வந்த அவருக்கு கடும் தோள்பட்டை வலி ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மருத்துவ மனையில் அஜீத்துக்கு அறிவை சிகிச்சை நடை பெற்றது.  இந்த தகவல் ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.  அதற்காக அஜீத் விரைவில் லண்டனுக்கு சென்று 3 மாதங்கள் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More articles

Latest article