சென்னை:

மிழகத்தில் வரும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் பூத் சிலிப் விநியோகம் தொடங்கிஉள்ளது. தேர்தல் ஊழியர்கள்  வீடு வீடாக சென்று பூத் சிலிப் விநியோகம் செய்து வருகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், வரும் 16ந்தேதியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில்,  வாக்காளர்கள், தங்களது வாக்கை செலுத்த வாக்குச்சாவடிக்கு செல்லும்போது எடுத்துச் செல்லக்கூடிய  பூத் சிலீப் தேர்தல் அலுவலர்கள் மூலம் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வாக்காளரின் புகைப்படமும் பெரிய அளவில் அச்சிட்டு பெயர், பாகம் எண், வாக்குச்சாவடி அமைந்துள்ள விவரம்  அதில் அச்சிடப்பட்டுள்ளது.

நேற்று தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்படி, சுமார் 6 கோடி (மொத்தம் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758)  வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் வாக்களிக்கும் வகையில், 67 ஆயிரத்து 500 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.