அரசு ஆதரவுடன் எம்.பி.க்களின் ஐபோன்கள் தரவுகள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து அகிலேஷ் யாதவ், பிரியங்கா சதுர்வேதி, பவன் கேரா, மஹுவா மொய்த்ரா, சுப்ரியா ஸ்ரீனேட், சசி தரூர் ஆகியோருக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து இவர்கள் பதிவிட்டுள்ளனர்.

எம்.பி.க்கள் தவிர, பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் என்று பலரும் ஆளும் பாஜக அரசின் கண்காணிப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து இதுவரை மத்திய அரசு வாய்திறக்காத நிலையில், 81 கோடி இந்தியர்களின் தரவுகள் இணையதளத்தில் வெளியானதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், எம்.பி.க்களின் ஐபோன்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.