ஐ-போன் பயனர்கர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாடிக்கையாளர் சேவை வழங்குவதை நிறுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு X (ட்விட்டர்), யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக அவர்களது குறைகளை தீர்க்கும் சேவையை அந்நிறுவனம் வழங்கி வந்தது.

2016 ம் ஆண்டு முதல் இதற்காக பிரத்யேகமாக சில ஊழியர்களை நியமித்து ட்விட்டர் மூலம் எழுப்பப்படும் வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்து வந்தது.

இந்த நிலையில் இந்த சேவையை நிறுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகவும். சமூக வலைதள வாடிக்கையாளர் சேவை மைய்ய ஊழியர்களை தொலைபேசி சேவை பிரிவுக்கு தயார்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அக்டோபர் முதல் இந்த சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் வாடிக்கையாளர் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப் போவதில்லை என்றும் அதற்கு பதிலாக போன் சேவையை பயன்படுத்த வலியுறுத்தி தானியங்கி தகவல்களை வழங்க இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும், நவம்பர் மாதத்திற்குள் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போன் சேவைக்கு மாற விருப்பமில்லாத தனது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்ற போதும் விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.