சான் பிரான்சிஸ்கோ

க்ஸ் (டிவிட்டர்) தளத்தில் இனி ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் இடம் பெறும் என அந்த தள அதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளர்

கடந்த 2022ல் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.   அவர் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் தொடர்ந்து அதிரடி  மாற்றங்களை எலான் மஸ்க் மேற்கொண்டு வந்து சமீபத்தில் டிவிட்டரின் லோகோவையும் பெயரையும் மாற்றி அறிவித்தார்.

மேலும் வருவாயை அதிகரிக்கும் வகையில்  புளு டிக் வசதி பெற கட்டணம் செலுத்தும் வசதியையும் மாதச்சந்தா முறையையும்  அறிமுகம் செய்தார். அப்போது எலான் மஸ்க்  இனி எக்ஸ் தளம் சூப்பர்-ஆப் ஆக செயல்படும்  கூறியிருந்தார். தொடர்ந்து  தற்போது  எக்ஸ் (டிவிட்டர்) தளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள் இடம் பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் பிசி என அனைத்திலும்  இந்த அழைப்புகள் இயங்க உள்ளன.  இதற்கு தொலைபேசி எண் தேவையில்லை என்பதுடன் இது தனித்துவமாக இருக்கும் என எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் போஸ்ட் செய்துள்ளார். ஆயினும் சில பயண்ர்கள் இது எக்ஸ் தளத்தில் சந்தா செலுத்தி வரும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.