சிசி டிவி இல்லை என்று அப்பல்லோ  பொய்?

Must read

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சமீபத்தில் அப்பல்லோவில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, “மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுது குறித்த சிசி டிவி பதிவுகளை வெளியிடலாமே” என்று கேட்கப்பட்டதற்கு, “சிசி டிவி கேமரா கிடையாது” என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.

ஆனால் அப்பல்லோ மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில், தங்களது மருத்துவமனையில் சிசி டிவி கேமரா இருப்பதாக  சொல்லியிருக்கிறது.

ஆகவே செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர்கள் சொன்னது பொய்யா என்ற கேள்வியை சமூகவலைதளங்களில் பலரும் எழுப்பி வருகிறார்கள்.  .

தங்களது மருத்துவமனையில் சிசி டிவி கேமரா உண்டு என தெரிவிக்கும் அப்பல்லோ இணையதள தொடுப்பு:

https://www.apollohospitals.com/patient-care/value-added-services/virtual-icu-visit

More articles

Latest article