சென்னை

ற்கனவே அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் சோதனை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிமுக மாவட்டச் செயலர் வீட்டிலும் சோதனை செய்து வருகின்றனர். ஆரம்பாக்கத்தில் தி.நகர் சத்யாவின் நண்பர் திலீப்குமார் அலுவலகத்தில் ரெய்டு 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்தி வருகின்றனர். மொத்தம் 18 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தி.நகர் சத்யா வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக செயலர் ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்தச் சோதனை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டையில் ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டில் நடைபெற்று வருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். சத்யா, அதிமுக மாவட்டச் செயலர் ராஜேஷ் வீடுகளில் சோதனை நடத்துவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோதனை நடைபெற்றுவரும் இடங்களில் அதிமுகவினர் குவிந்து வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பாக்கத்தில் தி.நகர் சத்யாவின் நண்பர் திலீப்குமார் அலுவலகத்தில் ரெய்டு 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் காலை 7 மணி முதல் சோதனை திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்க வாய்ப்புள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா தொடர்புடைய 18 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது