'இன்னொரு அதிசயம் நிகழுமா இல்லையா என்பது பற்றி தெரியாது: சுப்பிரமணியன்சுவாமி

Must read

சென்னை,
முதல்வர்  கவலைக்கிடமான நிலையில்,   இன்னொரு அதிசயம் நிகழுமா இல்லையா என்பது பற்றி தெரியாது: சுப்பிரமணியன்சுவாமி கருத்து தெரிவித்து உள்ளார்.
அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, சுப்பிரமணியன்சுவாமி கூறியிருப்பதாவது,
நேற்று இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இந்திய அளவில் பல்வேறு தலைவர்கள் முதல்வர் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.
subramaniyasamy
இந்நிலையில், பா.ஐ.க.வின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பரமணியன் சுவாமி,’இன்னொரு அதிசயம் நிகழுமா இல்லையா என்பது பற்றி தெரியாது. அப்போலோ சீக்கரமே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடும். அதன் பின் தான் நமக்கு என்ன நிலவரம் என்பது பற்றி தெரியவரும். எதுவாக இருந்தாலும், மத்திய அரசு கிட்டத்தட்ட 75 நாட்களாக அதற்கு தயார் நிலையில் தான் இருக்கிறது.’ என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே முதல்வர் குறித்து சர்ச்சையாகவும், பின்னர் அதிசயம் நிகழ்ந்துவிட்டது என்றும் டுவிட்டரில் செய்தி பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article