ச்ச நட்சத்திரத்துக்கு தொடர்ந்து மன வருத்தத்தில் இருக்கிறார். இளைய மகள் விவாகரத்து பெற்றுவிட்டார்.

இந்த நிலையில் மூத்த மகளும் அதே வழியில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார். அவரது நட்சத்திர ஒல்லி கணவர் பற்றி கசமுசா செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இதனால் அடிக்கடி இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுவது உண்டு. அப்போதெல்லாம் உச்ச நட்சத்திரமும் அவரது மனைவியும் சமாதானம் செய்து வைப்பார்கள்.

சமீபத்தில் பாடகி ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பல அதிர்ச்சி செய்தி மற்றும் படங்களை வெளியிட்டதும், அதில் அந்த ஒல்லிப்பிச்சான் மாப்பிள்ளை நடிகரின் படமும் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்.

இதையடுத்துதான் தம்பதிக்குள் மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற தருணங்களில் நட்சத்திர நடிகர் கள்ள மவுனம் சாதித்துவிடுவார். பிரச்சினை அப்போதைக்கு ஆறப்போடப்படும்.

ஆனால் இந்த முறை அப்படி இல்லையாம். பதிலுக்கு அவர், “நீ என்ன ஒழுங்கா” என்று பதிலுக்கு எகிறிவிட்டாராம். உள்ளாடை கடை அதிபர் மற்றும் வம்பு நடிகருடன் அம்மணிக்கு இருந்த நெருக்கம் பற்றி வெளிப்படையாகவே சொல்லி குத்திக்காட்டி வி்ட்டாராம்.

அதனால் அம்மணி ஆத்திரத்துக்கு உச்சிக்கே சென்றுவிட்டார். மேலும், “அதல்லாம் என் திருமணத்துக்கு முன்தானே. உங்கள் மனைவியான பிறகு நான் நல்ல குடும்பத்தலைவி யாகத்தானே இருக்கிறேன்.

தவிர எல்லா விசயமும் தெரிந்துதானே திருமணம் செய்துகொண்டீர்கள். இப்போது சொல்லிக்காட்டுகிறீர்களே” என்று குமுறிவிட்டாராம்.

மேலும், “இனியும் உங்களுடன் சேர்ந்து வாழ முடியாது. விவாகரத்துதான் வழி” என்றும் டிக்ளேர் செய்துவிட்டாராம்.

நடிகரும், “அதுதான் சரி” என கூலாக சொல்லிவிட்டார்.

இதற்கிடையே விவகாரம் உச்ச நட்சத்திரத்துக்குச் செல்ல.. வழக்கம்போல சமாதானம் பேசி யிருக்கிறார்.

ஓல்லிப்பிச்சான் நாயகன், வெள்ளைக்கொடி காட்டிவிட்டார். ஆனால் அம்மணிக்கு ஆவேசம் அடங்கவில்லை.

இந்த நிலையில்தான் நாட்டிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வெளிநாட்டுக்கு பறந்தார் அம்மணி. “திரும்பி வந்த பிறகு, விவாகரத்துதான்” என்று சொல்லிவிட்டே பறந்திருக்கிறாராம்.

இதனால் மீண்டும் ஆத்திரமான ஒல்லி நடிகர், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டாராம்.

இதற்கிடையே அந்த ஒல்லி நடிகரின் சகோதரி தனது ட்விட்டர் பக்கத்தை முடக்கிவிட்டார். அதற்கு முன்பாக, “என் சகோதரன் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக சொல்கிறார்கள். இதனால் பல பிரச்சினைகள். ஆகவே மன வேதனையுடன் எனது ட்விட்டர் கணக்கை மூடுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

தற்போது உச்ச நடிகர் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். “ஹூம்.. ஆம்பளை அப்படி இருக்கணும்.. பொம்பளை இப்படி இருக்கணும் என்று ஊருக்கெல்லாம் அட்வைஸ் செய்வார் உச்ச நடிகர். ஆனால் அவர் சொல்வதைக் கேட்க அவர் குடும்பத்திலேயே யாருமில்லையே..” என்று வருத்தப்படுகிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.