லிஃபோர்னியா

க்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தாமல் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் உலகில் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.   இதையொட்டி பல உலக நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன.  ஒரு சில நாடுகளில் இயல்பு கொரோனா பாதிப்பு குறைவால் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.   இதனால் அந்த நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.

இவ்வாறு இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கட்டுப்பாட்டுக்களை தளர்த்தி உள்ளன.   இந்த நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.    ஆயினும் இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடவில்லை.

உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் இது குறித்து, “தொடர்ந்து கொரோனா பரவலை நாங்கல் கண்காணித்து வருகிறோம்உலகில் பல நாடுகள் இன்னும் ஆபத்தில்தான் உள்ளனஅனைத்து மக்களுக்கும்   கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தாமல் தளர்வுகளை  அமல்படுத்துவது ஆபத்தில்தான்  முடியும்

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள்  ஒவ்வொரு நாடும் தங்கள் மக்கள்தொகையில் 10% மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த  வேண்டும்.  இந்த வருட இறுதியில் இந்த எண்ணிக்கை 30% ஆக  வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.