சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி 100ன் கீழ் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதை செயல்படுத்துவது தொடர்பாக துறைச்செயலாளர்கள் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக சட்டபேரவையின் 16வது கூட்டத்தொடர்  கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 2 நாட்களாக  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து  விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. 3 நாள் மட்டுமே கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம்  13ஆம் தேதி முதல்  செப்டம்பர் 13ந்தேதி வரை நடைபெற்றது. 23 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில், சட்டப்பேரவை விதி 110ன் கீழும், துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போதும் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துறைச்செயலாளர்களுடன் நாளை  ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் அரசு உயரதிகாரிகள் மற்றும் அனைத்துத் துறை செயலாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக சிறப்புக் குழு ஒன்றை நியமிக்க இருப்பதாகவும் கோட்டை வட்டார  தகவல்கள் தெரிவிக்கின்றன.