சென்னை:கலைஞர் பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவியுங்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைக்கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். தமிழகத்தில் 5முறை முதல்வர், அரசியல் கட்சி தலைவர் என பன்முகத் தன்மையுடன் பணியாற்றி, தமிழக உரிமைக்காக போராடி, தமிழர்களை தலைநிமிர வைத்த ஒப்பற்ற தலைவன் மு. கருணாநிதி.  அண்ணா மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற  கருணாநிதி, மாநில உரிமைக்காக குரல் கொடுத்து, அதை நிறைவேற்றிய பெருமைக்குரியவர். அவர்  தமிழ் சமூகத்திற்காக ஆற்றிய பணிகள் அளப்பரியது.

ஈடுஇணையற்ற சாதனையாளர். . சமூகப் போராளியான அவர் தம் இறுதி நாட்கள் வரை சமூகநீதி, மத நல்லிணக்கம், மாநில சுயாட்சி மற்றும் சுயமரியாதை ஆகியவற்றுக்காகப் போராடியவர். மாநில உரிமையை மீட்டெடுத்தவர்.

இன்று கருணாநிதியின் 98வது பிறந்தநாளையொட்டி,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில், “#சூன்3_மாநிலஉரிமைநாள்: பெரியார், அண்ணா பாசறையில் வளர்ந்தவர். மைய-மாநில அரசுகளின் உறவுகளை ஆராய ஆணையம் நியமித்தவர். மாநில உரிமைகளுக்கு அடித்தளம் அமைத்தவர். கூட்டாட்சி கோட்பாட்டுக்கு உயிர்ப்பை அளித்தவர். தமிழக அரசே, , #கலைஞர்_பிறந்தநாளை_மாநில_உரிமை_நாளாக அறிவிக்கவும்.  என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.