சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள் என ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ் நரசிம்மன் என்பவர் குற்றம் சாட்டி  வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அதில், பாஜக தலைவர் அண்ணாமலையால் என் உயிருக்கு ஆபத்து. கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கம் பகுதியைச்சேர்ந்தவரான ரங்கராஜ் நரசிம்மன் என்பவர் கடந்த அதிமுக ஆட்சியில்,  ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்ட தாகவும், ஆயிரத்து 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த குத்து விளக்கை மாற்றி வெள்ளி விளக்கு வைக்க முயற்சி நடப்பதாக புகார் தெரிவித்தவர். இவர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டவர். அதுபோல சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை மாற்றப்பட்டுள்ளதாக தொடர்ந்த வழக்கில் தொழில் அதிபர் வேணு சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட காரணமாக இருந்தவர்.

இவர் தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆட்கள் தன்னை மிரட்டுவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ…