அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று பகிரங்க உத்தரவு பிறப்பித்தார்.

ஆளுநரின் இந்த உத்தரவு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று அதிமுக, பாஜக நீங்கலாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து முக்கிய கட்சிகளும் குரல்கொடுத்தது.

இதனையடுத்து சில மணி நேரங்களிலேயே தனது முந்தைய உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலினுக்கு ரகசிய கடிதம் எழுதினார் ஆளுநர் ரவி.

இந்த நிலையில் இது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது , “செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த அறிவிப்பை வாபஸ் பெற்றதாக கவர்னர் கூறவில்லை அதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தான் குறிப்பிட்டுள்ளார்” என்று உள்துறை அமைச்சகத்துக்கு தெரியாமல் ஆளுநர் எடுத்த முடிவுக்கு வக்காலத்து வாங்குவதுபோல் பேசியுள்ளார்.