சென்னை: சென்னையின் அடையாளங்களில் ஒன்றான அண்ணாநகர் டவர், புதுப்பிக்கப்பட்டு சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட டவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆகியோர் திறந்து வைத்தனர். இந்தநிகழ்ச்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சென்னை அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா மிகவும் பழமையான பூங்காக்களில் ஒன்று. டாக்டர் விஸ்வேஸ்வரர் பெயரிலான இந்த பூங்கா 1968ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான இந்தப் பூங்காவின் மையப்பகுதியில் உள்ள கோபுரத்தின் உயரம் 135 அடி. 12 அடுக்குகள் கொண்ட இந்த டவரில் ஏறினால், சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளின் அழகையும் ரசிக்கலாம்.

அண்ணாநகரின் அடையாளமாகத் திகழும் இந்த பூங்காவில், பல்வேறு சினிமா பாடல்கள், சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. 1968ல் வெளிவந்த கலாட்டா கல்யாணம், 1972ல் வெளியான பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட படங்களில் இந்த டவரின் தோற்றம் மட்டுமன்றி, பூங்காவின் அழகையும் காண முடிந்தது. தினசரி பல ஆயிரம் பேர் இங்கு வந்து இந்த டவரில் ஏறி, சென்னையின் எழில்மிகு அழகை ரசித்து வந்தனர்.

ஆனால், கடந்த 2011ம் ஆண்டு இரு இளைஞர்கள் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, டவருக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. பின்னர், ஆனால், அதை மீண்டும் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு  விட வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதையடுத்து, அதை  ₹30 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் மேம்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த ஒராண்டாக நடைபெற்று வந்த புதுப்பிக்கும் பணி நிறைவுபெற்ற நிலையில்,   நிலையில், நேற்று அமைச்சர் நேரு அண்ணாநகர்டவரை திறந்த வைத்தார். இதையமடுத்து டவர்  மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் வந்துள்ளது.