மோடியின் தவறுக்கு என்னை தண்டிக்ககாதீர்கள்- பஞ்சாப் அமைச்சர் கெஞ்சல்

Must read

மோடியின் தவறுக்கு என்னை தண்டிக்ககாதீர்கள்- பஞ்சாப் அமைச்சர் கெஞ்சல்

மோடியின் மீதான கோபத்தை என்மீது காட்டாதீர்கள்- பஞ்சாப் பாஜக அமைச்சர்
பஞ்சாபில் பாஜக அமைச்சர் ஒருவர் “மோடியின் பணமதிப்பிழக்க நடவடிக்கைக்கு என்னைத் தண்டித்து விடாதீர்கள்” என்று வாக்காளர்களிடம் கெஞ்சினார்.
பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து வடமாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைப்பெறுவதை ஒட்டிப் பிரச்சாரக்களம் சூடுபிடித்து வருகின்றது.
தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சராய் உள்ளவர் அனில் ஜோஷி, தன்னை வளர்ச்சி நாயகனாக முன்னிறுத்தி வருபவர்.

அமிர்தசரஸ் வட தொகுதியில் சென்ற முறை போட்டியிட்டு வென்ற அவர் தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகின்றார். தொகுதிமக்களிடம் வாக்குகேட்டு மீண்டும் தீவிரப் பிராச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், பணமதிப்பிழக்க நடவடிக்கையால் பாதிக்கபட்டு மோடி மீது கடும்கோபத்தில் இருக்கும் பொதுமக்களிடம், மோடியின் தவறுக்கு என்னைத் தண்டித்து வெற்றிவாய்ப்பை தடுத்துவிடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தான் செய்யாத தவறுக்கு தன்னை தண்டித்துவிட வேண்டாமென ஆதரவு கோரினார்.

ஜோஷி வசிக்கும், மெடிக்கல் எங்கிலேவ் பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஒரு சிறிய கூட்டத்தில் உரையாற்றிய ஜோஷி என் பதவிக்காலம் முடிந்துவிட்டது.இந்த ஒரு மாதம் உங்கள் கைகளில். மற்ற வாக்காளர்களிடம் சென்று எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு பிரச்சாரம் செய்யுங்கள். மக்கள் பண மதிப்பிழக்கம் செய்யப்பட்டதால் பா.ஜ.க மீது கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறுவார்கள். அவர்களிடம் சொல்லுங்கள், பண மதிப்பிழக்கம் செய்து மோடிதான். நமது ஜோஷிக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை. மக்களின் பிரச்சனைக்காகப் பல அரசாங்கங்கள் மற்றும் கார்ப்பரேட் அமைப்புகளுக்கு எதிராக உங்கள் ஜோஷி தொடர்ந்து போராடி வருகின்றார். அதிகாரவர்க்கத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடுவது எளிதான காரியமல்ல. எனவே மறக்காமல் ஜோசிக்கு வாக்களியுங்கள்” என மக்களைச் சமாதானப்படுத்துங்கள் “ என்றார்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்கள், “ பணமதிப்பிழக்க நடவடிக்கையின் தாக்கம்குறித்து கவலை யடைந்துள்ளீர்களா என்று கேட்டபோது, “ இல்லை. பணமதிப்பிழக்கத்தின் தாக்கம் முடிந்து விட்டது “என்று கூறினார். அவர், “பணமதிப்பிழக்க தாக்கம் கிட்டத்தட்ட 80 முதல் 90% முடிந்து விட்டது. இருந்தாலும், மக்கள் அடிமனதில்சந்தேகங்கள் இருந்தால், அதைத் தெளிவுப் படுத்தவே அவ்வாறு கூறினேன் என்றார்.

ஜோஷி தன் பிரச்சார சுவரொட்டிகளில் “வளர்ச்சி நாயகன்” தன்னை முன்னிறுத்தி வருபவர். தான் அமைச்சராக இருக்கும் உள்ளாட்சித் துறையின் நிதியில் பெரும்பாலான நிதியைத் தனது தொகுதிக்கு ஒதுக்கீடு செய்து பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

வடக்கு அமிர்தசரஸ் தொகுதியில் புதிய சாலைகள், புதுப்பிக்கப்பட்ட பூங்காக்கள், நடைபாதைகள், நீரூற்றுகள், மிதிவண்டித் தடங்கள், கழிவுநீர் அமைப்பு, அலங்காரத் தெரு விளக்குகள், நிலத்தடி குழாய்கள் மூலம் வடிகால்களை அழகுபடுத்தல், தரமானச் சாலைகள் என கண்கூடாக மக்கள் வளர்ச்சியைக் காணமுடிகின்றது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும், பெரும்பாலானப் பணிகள் முடிக்கப்பட்டன.

தன் பிரச்சாரங்களில், தவறிக்கூட முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் பெயரை இவர் பயன்படுத்துவதில்லை. “எனது போராட்டம், முற்றிலும் “தகுதி, உண்மை மற்றும் நீதி”யின் அடிப்படையிலானது. நான் மக்களில் ஒருவன். மக்களுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றேன். மக்கள்சேவையிலிருந்து என்னால் பின்வாங்க முடியது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்”, சாதி அடிப்படையில் பிளவு உள்ளதா என்றக் கேள்விக்கு, “ஒரு முழு சமூகத்தின் மீது மக்களுக்குக் கோபம் இல்லை, தனிநபர்களுக்கு எதிராக எப்போதும் கோபம் உள்ளது.” என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article