மும்பை:

அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 42 பில்லியன் டாலரிலிருந்து 0.5 பில்லியன் டாலராக குறைந்தது.


2008-ம் ஆண்டு 42 பில்லியன் டாலர் சொத்துகளுடன் அனில் அம்பானி உலக அளவில் 6-வது பணக்காரராக அனில் அம்பானி திகழ்ந்தார்.

தற்போது பில்லியனர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்.

கடந்த 11 ஆண்டுகளில் அனில் அம்பானியின் ஒட்டுமொத்த வர்த்தகம் சார்ந்த சொத்துகள் ரூ. 3,651 கோடியிலிருந்து ரூ.765 கோடியாக குறைந்துவிட்டது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரை தி ரிலையன்ஸ் குரூப் சொத்துகள் ரூ. 8 ஆயிரம் கோடியாக இருந்தன.

பல நிறுவனங்கள் பணம் நிலுவை வைத்ததின் காரணமாக, அந்த நிறுவனத்தில் பங்குகள் பெரிதும் சரிந்தன.

அதேபோல், ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அசட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பரஸ்பர நிதியின் மதிப்பு 42.88 சதவீதமாக குறைந்தது.

2018-ம் ஆண்டு மார்ச் வரை ரிலையன்ஸ் குரூப் கம்பெனிக்கு 1.7 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்நிறுவனத்தின் பெரும் சொத்துகள் மற்றும் வர்த்தக சொத்துகளை விற்பனை செய்வதை இந்த கடன் பாதித்துள்ளது.

தற்போது அனில் அம்பானி தமது ராஜ்யத்தை இழந்துள்ளார்.

கடந்த வாரம் தமக்கு ரூ.35 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக அனில் அம்பானி தெரிவித்தார்.
அடிப்படை தொகை ரூ.24,800 கோடியும், அதற்கான வட்டி 10,600 கோடியும் கடந்த 14 மாதங்களில் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வங்கிகளில் பெற்ற கடனை அடைக்கமுடியாமல், தன்னை திவாலானவராக அறிவிக்கக் கோரி அனில் அம்பானி கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.