டில்லி:

ந்தியில் பதவி ஏற்ற கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிகுன்னில் சுரேசை காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா கண்டித்தார். தாய்மொழியில் பதவி ஏற்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினார்.

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று காலை தொடங்கியது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உள்பட மூத்த உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் நடைபெற்றது. இன்றும் மீதமுள்ள உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் நடைபெற உள்ளது. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள  பாஜக மூத்த உறுப்பினர் வீரேந்திர குமார்  பிரமாணம் செய்து வைத்தார்.

முதலாவது எம்.பி.யாக வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த பாராளுமன்ற உறுப்பினர்  கேரளாவின் மாவேளிக்கார மக்களவை உறுப்பினரான  சுரேஷ் கொடிக்குன்னில் 2வது உறுப்பினராக பதவி ஏற்றார். அப்போது கொடிகுன்னில் சுரேஷ் தாய்மொழியை தவிர்த்து இந்தியில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றார்,

கேரள காங்கிரஸ் எம்.பி.யின் இந்த நடவடிக்கையை பாஜக உரத்த குரலில் வரவேற்றது. இது சோனியா உள்பட காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு எரிச்சலையூட்டியது. இதையடுத்து, கொடிக் குன்னிலையை அழைத்த  யுபிஏ காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரிடம் கடிந்து கொண்டார். தன் தாய்மொழியில் உங்களால் சத்தியப்பிரமாணம் எடுக்க முடியாதா என கேள்வி எழுப்பினார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இந்தியில் சத்தியப்பிரமாணம் செய்ய முடிவு செய்திருந்த மற்ற கேரள மக்களவை உறுப்பினர்களான ராஜ்மோகன் உன்னிதன், வி கே ஸ்ரீகாந்தன் ஆகியோரின் மற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்கள் எண்ணத்தை மாற்றியுள்ளனர்.