வீரமரணம் அடைந்த வீரரின் சகோதரி திருமணத்தை கோலாகலமாக நடத்திய சக வீரர்கள்…

Must read

பாட்னா:

யங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலின்போது வீரமரணம் அடைந்த வீரரின் சகோதரியின் திருமணத்தை, சக வீரர்கள் கோலாகலமாக நடத்தி சாதனை படைத்தனர். அவர்களின் செயல்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

விமானப்படை கமாண்டோ வீரர் ஜோதி பிரகாஷ் நிராலா. பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் இந்திய விமானப்படை வீரராக பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின்போது காஷ்மீரில்  வீர மரணம் அடைந்தார்.

இதையடுத்து ஜோதி பிரகாஷ் நிராலாவுக்கு நாட்டின் உயரிய விருதான அசோக சக்ரா விருது 2018-ம் ஆண்டு குடியரசுதின விழாவின்போது வழங்கப்பட்டது.

விமானப்படை கமாண்டோ வீரர் ஜோதி பிரகாஷ் நிராலா அவரது பெற்றோருக்கு ஒரே மகன். 4 சகோதரிகளுடன் பிறந்த அவரது குடும்பம், அவரது மறைவுக்கு பிறகு பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.

இதன் காரணமாக  அவரது சகோதரி சசிகலாவுக்கு திருமணம் செய்ய முடியாமல் குடும்பத்தினர் தவித்து வந்தனர்.  இது குறித்து தகவல் தெரிந்த நிராலாவுடன் பணியாற்றிய சக வீரர்கள், நிராலா வின்  சகோதரிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அதையடுத்துரு, ஒவ்வொரு வீரர்களும்  500 ரூபாய் வீதம் தங்கள் பங்காக அளித்தனர். இதன் காரணடமாக  சுமார் ரூ.5 லட்சம் நிதி சேர்ந்துள்ளது. இதை வைத்து நிரலாவின் சகோதரி திருமணத்தை தங்கள் சகோதரியின் திருமணம் போல சிறப்பாக நடத்தி வைத்துள்ளனர். இந்த திருமண நிகழ்ச்சிக்கு நிராலாவுடன் பணியாற்றிய சுமார் 50 வீரர்கள் நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திருமண நிகழ்ச்சியின்போது,  இறந்த வீரருக்கு தங்கள் மரியாதையை தெரிவிக்கும் வகையில் சில வீரர்கள் தரை யில் தங்களது கைகளை வைத்து உள்ளங்கை மீது மணமகளான அந்த சகோதரியை நடக்கச் செய் துள்ளனர்

இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீர மரணம் அடைந்த வீரரின் சகோதரி திருமணத்தை தங்களது சகோதரியின் திரும ணம் போல நடத்திவைத்த வீரர் களுக்கு பாராட்டு குவிகின்றன.

 

More articles

Latest article