உறைபனியில் உறைந்த நிலையில் இருக்கும் மீன்களுடன் வடிவமைக்கப்பட்ட ஸ்கேட்டிங் தளம் ஜப்பானில் மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பின் மூடப்பட்டது.

[embedyt] http://www.youtube.com/watch?v=tEawsqd5hy0[/embedyt]

Courtesy: Hindustan Times

ஜப்பானில் உள்ள ஒரு பிரபல பொழுதுபோக்கு பூங்கா, தனது உறைபனி ஸ்கேட்டிங் தளத்தை சற்று வித்தியாசமாக வடிவமைக்க எண்ணி மீன்களை வாங்கிவந்து உறைபனியில் விட்டு அவற்றை “Hello” மற்றும் அம்புக்குறி போன்ற வடிவங்களில் வைத்து தளத்தை வடிவமைத்திருந்தது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எண்ணியது. ஆனால் நடந்ததோ வேறு!

fish_rink

உயிர்களை இப்படியா இழிவு செய்வது! என்று மக்கள் வெகுண்டெழுந்து விட்டனர். அந்த நிறுவனத்தின் இணையதளம் கண்டனங்களால் நிறையவே. அந்த நிறுவனம் மக்களிடம் மன்னிப்பு கேட்டு ஸ்கேட்டிங் தளத்தை மூடிவிட்டது.
இதுகுறித்து பேசிய அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “மக்கள் உயிருள்ள மீன்களை நாங்கள் வாங்கிவந்து பனியில் விட்டு சாகடித்து இந்த தளத்தை வடிவமைத்திருப்போம் என்று எண்ணிவிட்டார்கள். அப்படியல்ல அவைகள் ஏற்கனவே செத்த நிலையில் மார்க்கெட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட மீன்கள். ஆனாலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஸ்கேட்டிங் தளத்தை மூடுகிறோம். இந்த செயலுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறினார்.