விஜயவாடா:

ந்திர முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றார். லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் வாகனத்தில் பவனி வந்த ஜெகன், முதல்வராக பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து மேடையிலேயே முதல் கையெழுத்தாக முதியோர்கள் பென்சன் ரூ. 1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், அதை  ரூ.2250ல் ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டார்.

ஆந்திர மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. 175  தொகுதிகளை கொண்ட ஆந்திராவில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை எதிர்த்து களமிறங்கிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தை ஆட்சி செய்து வந்த  சந்திரபாபு நாயுடு கட்சி வெறும் 23 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், பவன் கல்யானின் ஜனசேனா ஒரு இடத்தையும் கைப்பற்றியது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் எந்தவொரு தொகுதியையும் கைப்பற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இதையடுத்து மாநில கவர்னர் நரசிம்மனை சந்தித்து, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரினார். கவர்னர் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து. இன்று விஜய வாடாவில் ஜெகனின் பதவி ஏற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஜெகனுக்கு மாநில கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவி ஏற்றதும், அதே மேடையில் தனது முதல் உத்தரவாக முதியோர்கள்  ஓய்வூதியத்தை ரூ.2250 ஆக உயர்த்தி கையெழுத்திட்டார். இதுவரை முதியோர்களுக்கான ஓய்வூதியம் ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், அதை  ரூ.2250 ஆக உயர்த்தி இருப்பது ஆந்திர மாநில மக்களி டையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பதவியேற்பு விழாவில், தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பதவியேற்பு விழாவிற்கு பின்னர், மேடைக்குச் சென்ற, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெகன்மோகன்ரெட்டிக்கு, மலர்கொத்து கொடுத்து, கைகுலுக்கி, தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.