டெல்லி: இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை விபத்துக்குள்ளானது. விமானியை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தின் போம்டிலா அருகே இந்திய ராணுவ விமானச் சீட்டா ஹெலிகாப்டர்  இன்று காலை விபத்துக்குள்ளானது. காலை 9:15 மணியளவில், ராணுவ ஹெலிகாப்டர்  ATC உடனான தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது இதையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணிநடைபெற்றது. அதில், விபத்துக்குள்ளான சீட்டா ஹெலிகாப்டர், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் ராணுவ விழுந்து விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, .விமானியை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.