வாஷிங்டன்: அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் எல்லைக் கோட்டை சர்வதேச எல்லையாக அமெரிக்கா  அங்கீகரித்துங்ளளது.  சீன அத்துமீறல்களுக்கு எதிராக பாதுகாப்பிற்காக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கை களுக்கும் தீர்மானத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் வடகிழக்கே உள்ள கடைசி மாநிலம் அருணாசல பிரதேசம். அந்த மாநிலத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லை சீனாவின் எல்லையையொட்டி இருக்கிறது. இதை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனா அருணாசல பிரதேசத்தின் பெரும்பாலான எல்லைப் பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி, அதை ‘தென் திபெத்’ என்று அழைக்கிறது.

இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே  எல்லை தகராறு இருந்தாலும் அதன் அழகான மலைகள், ஆறுகள், காடுகள் என அமைதியான மாநிலமாக இருந்து வந்தாலும், சில காலமாக அங்கு நிலைமை மாறி, எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, லடாக்கில் இந்தியா-சீனா இடையே நடந்த மோதலின் தாக்கம், 17 லட்சம் மக்கள்தொகை கொண்ட அருணாசல பிரதேசத்திலும் உணரப்பட்டது.

எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தவாங், அஞ்சாவ், மெச்சுகா போன்ற பகுதிகளில் இந்தியா கூடுதல் படைகளையும் கனரக ஆயுதங்களையும் நிலைநிறுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என,‘ மத்தியஅரசு உறுதியாக கூறி வருகிறது.  இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா- சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது..   இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சலப் பிரதேசம்  . அதில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதை கண்டிக்கிறோம் என்று கூறி அமெரிக்க செனட் சபையில் ஒரு அரிதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட் சபையில் வியாழக்கிழமை அன்று இதுதொடர்பான தீர்மானத்தை ஜெஃப் மார்க்லே, பில் ஹாகர்டி, ஜான் கார்னின்  ஆகிய மூன்று  எம்.பி.க்கள் அறிமுகப்படுத்தினர். அதில், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. நாங்கள் இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய நேர்மையை மதிக்கிறோம். சீனா ராணுவ பலத்தைப் பயன்படுத்தி எல்லைப் பகுதியில் நடத்து அத்துமீறல்களைக் கண்டிக்கிறோம். சீன அத்துமீறல்கள், அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியா மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் அனைத்து வகையிலும் பேணுவோம் என்று உறுதியளிப்பதாக இருந்தது. இந்தியாவுக்கும், இந்தோ – பசுபிக் பகுதிக்கும் சீனா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள செனேட்டர் பில் கெஹேர்டி, இந்த நேரத்தில், இந்தியாவுடன் தோளோடு தோள் நிற்பது அமெரிக்காவுக்கு முக்கியமானது என்றார்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் ராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார். அமெரிக்காவின் இந்த அரிதான தீர்மானம் உலக நாடுகளின் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் இந்தத் தீர்மானம் பாதுகாப்பு, தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகளை அமெரிக்க-இந்தியா இடையிலான இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உதவுகிறது. மற்றும் தென்கிழக்கு நட்பு நாடுகளுடன் இணைந்து குவாட் மற்றும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டின் மூலம் இந்தியாவுடனான நமது பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.

 இந்தியாவுடன் சர்வதேச பிரச்சினைகளில் பல்முனை ஒத்துழைப்பு நல்குவோம் என்று குவாட் மாநாட்டின் மூலம் அமெரிக்கா உறுதியேற்றுள்ள நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.