டெல்லி: ராகுல் மற்றும் அதானி விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுவதால், இன்று 4வது நாளாக பாராளுமன்ற இரு அவைகளும் முடங்கி உள்ளன.

இந்த நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனிதச் சங்கிலியில் போராட்டம் நடத்தினர். அதானி விவகாரத்தில், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு கோரிக்கை விடுத்து இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் பாஜக கூட்டணி கட்சிகளை தவிர, காங்கிரஸ், திமுக உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள்  ஒன்றிணைந்து  கைக்கோர்த்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

12 பகல் 12 மணி அளவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து கைக்கோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இந்த போராட்டத்தின்போது,  மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

முன்னதாக, நேற்று பாராளுமன்ற வளாகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக புறப்பட்டனர். ஆனால், டெல்லியில், 144 தடை உத்தரவு அமலில் உள்ளதை சுட்டிக்காட்டி விஜய் சவுக் பகுதியில் எதிர்கட்சி எம்.பி.க்களான போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் எதிர்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில், காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா கட்சி, பாரத் ராஷ்டீரிய சமிதி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ம.தி.மு.க., ஆம். ஆத்மி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 15 எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.