’மதரசாப்பட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன் .

தற்போது ஹாலிவுட் சீரியல் ஒன்றில் நடித்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் இவருக்கும் இவர் காதலர் ஜார்ஜ் பனயாட்டோவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அவ்வப்போது இவர்கள் ஒன்றாகவும், நெருக்கமாகவும் இருக்கும் புகைப்படங்களை எமி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

திருமணத்திற்கு முன்பாக கர்ப்பமடைந்திருக்கும் எமி ஜாக்சன், அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.குழந்தை பிறந்த பிறகு இருவரும் திருமணம் செய்துக்கொள்வதாக அதிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன். அந்த வீடியோவில் தனக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆண் குழந்தை என அவர் அறிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போத வைரலாகி வருகிறது.