கமதாபாத்

யோகா குரு பாபா ராம்தேவ், யோகா செய்ததின் மூலம் அமித்ஷா தனது எடையில் 20 கிலோ குறைத்துள்ளார் எனக் கூறினார்

குஜராத் அரசு ராம்தேவின் உதவியுடன் வரும் ஜூன் 21ஆம் தேதியன்று அகமதாபாத் ஜிஎம்டிசி மைதானத்தில் மாபெரும் யோகா கேம்ப் நடத்த உள்ளது.  இதில் அதிக அளவில் மக்கள் கலந்துக் கொண்டு ஒரு உலக சாதனை படைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன்பு டில்லியில் 2015ஆம் வருடம் பிரதமர் கலந்துக் கொண்ட யோகா கேம்ப் அதிக பட்சமாக 35985 பேர் கலந்துக் கொண்டிருந்தனர்.  அதை தாம் முறியடிப்பதாக ஏற்கனவே ராம்தேவ் மோடியிடம் கூறி இருந்தார்.  அதனால் இந்த நிகழ்வில் ராம்தேவ் இந்த நிகழ்வில் அதைப் போல் பன்மடங்கு மக்கள் கலந்துக் கொள்ள வேண்டும் எனும் ஆசையில் இந்த விழா ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்.

இந்த யோகா தினத்தை முன்னிட்டு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ராம்தேவ் நடத்தினார்.

அந்த சந்திப்பில் அவர் கூறியதாவது :

”யோகாவின் மூலம் உடல் எடையை எளிதாகக் குறைக்க முடியும்.  அமித்ஷா தொடர்ச்சியாக யோகா செய்ததன் மூலம் தனது எடையில் 20 கிலோ குறைத்துள்ளார்.  இதற்கு முன் யோகாவை ஒரு விளையாட்டு என்றோ அல்லது உடற்பயிற்சி என்றோ கூட அறியாமையால் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை.  ஆனால் நிலைமை இப்போது மாறி விட்டது.

உலகெங்கும் பதஞ்சலி ஹெல்த் செண்டர்கள் மூலம் யோகா பரப்பப்படும்..  யோகாவை பரப்ப உலகெங்கும் 10000 செண்டர்களும், அதில் இந்தியாவில் 1000 செண்டர்களும் விரைவில் ஆரம்பிக்கப் படும்.  தற்போது அகமதாபாத் ஜிஎம்டிசி மைதானத்தில் பிரம்மாண்ட யோகா கேம்ப் நடக்க இருக்கிறது. அதில் குறைந்தது 1.25 லட்சம் மக்கள் கலந்துக் கொள்வார்கள் “

இவ்வாறு ராம்தேவ் கூறினார்