சென்னை:

மிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் கலாந்தாய்வை தமிழ்நாடு  தொழில் நுட்ப கல்வி இயக்ககம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று   தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கிண்டியில் தொழில் நுட்ப கல்வி இயக்கக அலுவலகத்தில் வெளியிடுகிறார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பான அனைத்து நடவடிக்கை களையும் தமிழக தொழில்நுட்பக் கல்வி  இயக்கம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் இன்று வெளியாக உள்ளது.

பொறியியலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டனர். அந்த பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று தரவரிசை பட்டியலை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிடுகிறார்.

இதைத்தொடர்ந்து வரும் வரும் 25ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

26ம் தேதி முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 27ம் தேதி விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும் நடைபெற உள்ளது.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு பொறுத்தவரையில் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூலை 3ஆம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறும் என  தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.