சென்னை:
ந்திய ஆட்சிப் பணிகள் விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசின் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் கொண்டு வர மோடி தலைமையிலான பாஜக அரசு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், இந்திய ஆட்சிப் பணிகள் விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் ஒன்றிய அரசு செய்ய உத்தேசித்துள்ள திருத்தம் மாநில சுயாட்சிக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் கொண்டு வரும் முடிவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சசிகலா உள்ளிட்ட பலரும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.