சிஏஏ தொடர்பாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த ரஜினி சமீபத்தில் சிஏஏ தேவை என்று தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் யோசித்துப் போராட்டத்தில் இறங்க வேண்டும் எனவும் பேட்டி அளித்துள்ளார் .

ரஜினியின் இந்தப் பேச்சுக்கு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் அமீர்.”சிஏஏவுக்கு 50 நாட்கள் கழித்து ரஜினி ஆதரவு தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் சின்ன சின்ன ஊர்களில் கூட போராட்டம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் ரஜினி பேசியிருப்பது வருத்தம் அளிக்கிறது.மாணவர்கள் சுயமாகச் சிந்தித்துச் செயல்படக் கூடியவர்கள் என்பதை ரஜினி உணர வேண்டும்.

டெல்லியில் ஜே.என்.யூவில் நடந்த தாக்குதலுக்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், மீண்டும் மீண்டும் மாணவர்களையே குறை சொல்வது தவறு.

நாளைக்கே கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சியாக இருக்கும்போது, மாணவர்கள் போராட்டம் நடத்தும்போது உங்களுடைய தூண்டுதல் என்று சொல்ல முடியுமா? மாணவர்கள் குறித்து ரஜினி கூறிய கருத்து மிகவும் தவறானது” என கூறியுள்ளார்.