புதுடெல்லி:  
ஞ்சாப் முதல்வராக அம்பிகா சோனி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும்  சீக்கியர் ஒருவரை நியமிக்கப் பரிந்துரை செய்துள்ளார்.
பஞ்சாபின் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி உள்ளனர்.
இந்நிலையில்,  அம்பிகா சோனி,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நேற்று  நள்ளிரவு சந்திப்புக்கு அழைக்கப்பட்டார் என்றும், அந்த சந்திப்பின் பொது  பஞ்சாப் முதல்வராக அவர் மறுத்து விட்டார் என்றும் தெரிகிறது. மேலும் அவருக்குப் பதிலாகச் சீக்கியர் ஒருவரைப் பஞ்சாப் முதல்வராக வேண்டும் என்று அவர் பரிந்துரைத்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநிலத்தில் ஆதிக்கம் பெற்று வரும் ஆம் ஆத்மி கட்சியை எதிர்கொள்வதற்குத் தேர்தலுக்கு முன்னதாக சீக்கியர் அல்லாத ஒருவரை முன்னிறுத்தக் கட்சி விரும்புவதாகத் தெரிகிறது.
மாநில காங்கிரஸ் தலைவராகச் சீக்கியரான நவ்ஜோத் சிங் சித்துவையும்,  சீக்கியர் அல்லாத ஒருவரை முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கக்  கட்சி விரும்புவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.