டில்லி:
காஷ்மீரில் குஜராத்தை சேர்ந்த அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது நேற்று பயங்கரவாதிகள் நேற்று கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தின் போது பஸ் டிரைவரான சலீம் சேக் என்பவர் சார்துர்யமாக செயல்பட்டதாக உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து சலீம் கூறுகையில்,‘‘ நேற்றிரவு 8.30 மணியளவில் நான் பஸ்ஸை ஒட்டிக் கொண்டு சென்ற போது பஸ் மீது துப்பாக்கி சூடு நடத்தும் சத்தம் கேட்டது. எனினும் நான் பஸ்சை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டினேன். இதனால் பஸ் மீது பாய்ந்து துப்பாக்கி தோட்டாக்களின் எண்ணிக்கை குறைந்தது.

எனக்கு அந்த சமயத்தில் இறைவன் தான் அந்த பலத்தை கொடுத்தான். அதனால் தான் நான் தொடர்ந்து பஸ்சை ஓட்டினேன். பயணிகளை பாதுகாக்கும் வகையிலான இடத்தில் தான் நிறுத்த நினைத்தேன்’’ என்றார்.

சலீமுக்கு வீரதீர செயல் விருது வழங்கப்படும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபனி அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,‘‘ இதற்காக அந்த டிரைவருக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். துப்பாக்கி சூடு நடந்தபோது வேகமாக பஸ்சை ஓட்டி பல உயிர்களை காப்பாற்றியுள்ளார். இதற்காக அவருக் வீரதீர விருது வழங்கப்படும்’’ என்றார்.

‘‘அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை லஷ்கர் இ தொய்பா நடத்தியுள்ளது. இதற்கு மூளையாக பாகிஸ்தான் பயங்கரவாதி இஸ்மாயில் செயல்பட்டுள்ளான்’’ என்று ஜம்மு காஷ்மீர் மாநில ஐ.ஜி முனீர்கான் தெரிவித்துள்ளார்.