நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் மரணம், இயக்குனர் கவலைக்கிடம்….!

Must read

ஜோயல் சோஸா இயக்கத்தில் ரஸ்ட் திரைப்பட படப்பிடிப்பு நடந்த போது துப்பாக்கியால் சுடும் காட்சியை படமாக்கினர். அப்போது நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டதில், ஒளிப்பதிவாளர் மரணமடைந்தார். இயக்குனர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டத்தில் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் மீது குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதில் காயமடைந்த மற்றொருவர் இயக்குனர் ஜோயல் சோஸா. அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

More articles

Latest article