போலீஸ் விசாரணையில் சாராய வியாபாரி சாவு!

நாகப்பட்டிணம்,

போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சாராய வியாபாரி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதையடுத்து காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகை மாவட்டம்  கீழ்வேளூரை அடுத்த புலியூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சாராய வியாபாரி சுரேஷ்  மர்மமான முறையில் உயிரிழந்தார்.

போலீசார் கடுமையாக தாக்கியதாலேயே  சாராய வியாபாரி சுரேஷ் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். அவரது  உடலை வாங்க மறுத்து அவரது ஊரைச்சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள்  அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வருகின்றனர்.

சுரேஷை தாக்கிய காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்ககோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.


English Summary
alcohol merchant dead in Police investigating near Nagapatinam district